Retire of sachin tendulkar biography in tamil
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் பற்றிய திரைப்படக் கட்டுரைக்கு, சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ் என்பதைப் பாருங்கள்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 24 ஏப்ரல் 1973 (1973-04-24) (அகவை 51)[1] தாதர், மும்பை, மகாராட்டிரம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | லிட்டில் மாஸ்டர்,[1] மாஸ்டர் பிளாஸ்டர்[2][3] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.65 m (5 அடி 5 அங்) (5 அடி 5 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை இடச்சுழல், வலக்கை வலச்சுழல், வலக்கை இடத்திருப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 187) | நவம்பர் 15 1989 எ. பாகிஸ்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சனவரி 2 2011 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 74) | திசம்பர் 18 1989 எ. பாகிஸ்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | ஏப்ரல் 2 2011 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 10 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1988–இன்று | மும்பை துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–இன்று | மும்பை இந்தியன்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1992 | யோர்க்சயர் கவுண்டி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 15 நவம்பர் 2013 |
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkarஒலிப்புⓘ, பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.[4] துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாகக் கருதப்படுகிறார்.[5].[6] இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.
தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார்.[7]ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார்.
தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே[8] மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்.[9]
சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இதன்மூலம் மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப் பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார்.
Helen patriarch armstrong biography sampleஇவர் 2019ஆம் ஆண்டு ஐசிசியின்ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம் பெற்றார்.
இது வரை துடுப்பாட்டம் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் தேர்வுப் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது.[10] இவர் ஆறு முறை துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார்.
அதில் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் இடம் பிடித்திருந்தார்.[11]தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தில் தொடர் நாயகன் விருது வென்றார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு தனது 150 ஆண்டு விழாவின் போது அனைத்து காலத்திற்குமான சிறந்த பதினொரு நபர்கள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்ட அணியை அறிவித்தது.
அதில் இடம் பெற்ற ஒரே இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் சச்சின் மட்டுமே.[12][13][14]
விளையாட்டுத் துறையில் இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக 1994 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதும், 1997 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.[15][16] மேலும் 1999 இல் இந்தியாவின் குடிமை விருதுகளில் நான்காவதாக கருதப்படும் பத்மசிறீ விருதையும், 2008 இல் இரண்டாவதாக கருதப்படும் பத்ம விபூசண் விருதினைப் பெற்றார்.[17] மேலும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்நவம்பர் 16, 2013 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற சில மணித்தியாலத்தில்இந்தியப் பிரதமரின் அலுவலகத்திலிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதில் இந்தியாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் இருந்தது.[18][19] மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப் பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார்.[20][21] 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பை விருது வழங்கியது.[22]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]டெண்டுல்கர் ஏப்ரல் 24,1973இல் தாதர், மும்பையில் பிறந்தார்.
இவரின் பெற்றோர்கள் மகாராட்டிர[23][24] மற்றும் ராஜபூர் சரஸ்வத் பிராமண குடும்ப மரபைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[25] இவரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் பரவலாக அறியப்படும் மராத்தியபுதின எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவரின் தாய் ரஞ்னி காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[26] ரமேஷ் தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரான சச்சின் தேவ் பர்மன் என்பாரின் பெயரையே தனது மகனுக்கு பெயரிட்டார்.
சச்சினுக்கு நிதின், ஐத் எனும் இரு மூத்த சகோதரர்களும் சவிதா எனும் மூத்த சகோதரியும் உள்ளனர். இவர்கள் மூவரும் இவரின் தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் ஆவர்.[27][28]
சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார்.
பல துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
சச்சின் 1989ஆம் ஆண்டு தம் 16ஆவது வயதில் முதன்முறையாக இந்தியாவின் சார்பாகத் தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். பாக்கித்தான் அணிக்கு எதிரான இந்தத் தேர்வுத் தொடரில் ஓர் அரைச்சதம் எடுத்தார். 1990இல் இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது முதல் நூறு ஓட்டங்கள் எடுத்தார். இவர், தேர்வுப் போட்டிகளில் 15,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 18,000 ஓட்டங்களுக்கு மேலும் எடுத்துள்ளார்.
சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும் அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.
உள்ளூர்ப் போட்டிகள்
[தொகு]1987-88 ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பைத் தொடருக்கான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் மும்பை அணி சார்பாக விளையாடுவதற்காக நவம்பர் 14, 1987இல் தேர்வானார். ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இருந்தபோதிலும் அவ்வப்போது மாற்று களத்தடுப்பு வீரராக விளையாடினார்.[29] டிசம்பர் 11, 1988 இல் இவருக்கு 15 ஆண்டுகள் 232 நாட்களாக இருந்தபோது மும்பை அணிக்காக முதல் முறையாக முதல்தரப் போட்டிகளில் விளையாடினார். குசராத் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் மிக இளம்வயதில் முதல்தரப் போட்டிகளில் அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார்.[30]
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வலைப்பயிர்சியின் போது அந்த காலத்தின் சிறந்த வேகப் பந்து வீச்சாளராக இருந்த கபில்தேவின் பந்து வீச்சினை மிக எளிதாக சச்சின் கையாண்ட விதத்தினைக் கண்ட மும்பை மாநில அணித் தலைவரான திலீப் வெங்சர்க்கார் இவரை நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்தார்[31].
அதன் பின் தியோதர் மற்றும் துலீப் கோப்பைகளில் இவர் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[32]
1988-89 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இவரில் சிரப்பான திறனை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் மொத்தமாக இவர் 583 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த மும்பை வீரர்களில் முதலிடமும் ஒட்டுமொத்தமாக எட்டாவது இடத்திலும் இருந்தார்.
அவரது மட்டையாட்ட சராசரி 67.77 ஆக இருந்தது.[33] 1989-90 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இராணி கோப்பையில் இவர் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி சார்பாக விளையாடினார். தில்லி மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப்பதிவு செய்தார்.[34] 1990-91 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் அரியான மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் 75 பந்துகளில் 96 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[35] 1998 ஆம் ஆண்டில் பார்பரேனில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் இரு நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.
அந்தப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 204* ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[36] இவர் தான் அறிமுகமான ரஞ்சிக் கோப்பை, இராணிக் கோப்பை, துலீப் கோப்பை ஆகிய மூன்று உள்ளூர்ப் போட்டித் தொடர்களிலும் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 233* ஓட்டங்களைப் பதிவுசெய்தார்.[37] தனது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இதனைக் கருதுகிறார்.[38][39]
யார்க்சயர்
[தொகு]1992 ஆம் ஆண்டில் இவர் யார்க்சயர் அணிக்காக விளையாடத் தேர்வானார்.
அப்போது இவருக்கு வயது 19 ஆகும். ஆனால் அப்போது இங்கிலாந்து மாகாணத்தில் இருந்து கூட அந்த அணியில் விளையாடத் தேர்வாகவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான கிரெய்க் மெக்டெர்மோத் காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக தேர்வான சச்சின் 16 முதல்தரத் துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடி 070 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவரின் பந்துவீச்சு சராசரி 46.52 ஆகும்.[40]
சர்வதேசப் போட்டிகள்
[தொகு]1989 ஆம் ஆண்டின் இறுதியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் ராஜ் சிங் தங்கர்புர் தலைமையிலான தேர்வுக்குழு சச்சினை தேர்வு செய்தது.[41] அப்போது சச்சின் ஒரு முதல் தரத்துடுப்பாட்டப் போட்டித் தொடரில் மட்டுமே விளையாடியிருந்தார்.[42] இதற்கு முன்பாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சச்சினைத் தேர்வு செய்ய இருந்தனர்.
ஆனால் எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்களைக் கருத்தில்கொண்டு இவரைத் தேர்வு செய்யசில்லை. 1989இல் பாக்கித்தான் அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அப்போது இவருக்கு வயது 16 ஆண்டுகள் 205 நாட்கள் ஆகும். வக்கார் யூனிசுக்கும் அதுவே முதல் போட்டியாகும். அந்தப் போட்டியில் பெரும்பாலான பந்துவீச்சுகளை இவரின் உடல்பகுதியில் பட்டது.[43] சியல்கோட்டில் நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதிப் போட்டியில் யூனுஸ் கான் வீசிய பந்தில் இவரின் மூக்கில் பட்டு காயமடைந்தார்.
ரத்தம்வழிந்த போதிலும் சிகிச்சை மேற்கொள்ளாமல் தொடர்ந்து விளையாடினார்.[44] பெஷாவரில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் 18 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்தார். இதில் அப்துல் காதிர் வீசிய ஒரு ஓவரில் 27 ஓட்டங்கள் (6, 4, 0, 6, 6, 6) எடுத்தார்
1994 ஆம் ஆண்டில் ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 49பந்துகளில் 82 ஓட்டங்களை எடுத்தார்.
1994 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.செப்டம்பர் 9, கொலும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார்.[45] தனது முதல் ஒருநாள் நூறு ஓட்டங்களை எடுப்பதற்கு இவர் 78 போட்டிகளை எடுத்துக் கொண்டார்.
1996 ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். அதில் இரண்டு நூறு ஓட்டங்களைப்பதிவு செய்தார். மேலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பிடித்தார்.[46]
தனது வாழ்நாளின் மிகச்சிறந்த போட்டி இதுவாகும்-கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் [47]
இந்தியத் துடுப்பாட்ட அணியில் மிகக் குறைவான வயதில் 16 ஆண்டுகள் 238 நாட்களில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.[48][49]
அணித் தலைவராக
[தொகு]அணித்தலைவராக சச்சினின் செயல்பாடு | |||||||
---|---|---|---|---|---|---|---|
போட்டிகள் | வெற்றி | தோல்வி | Drawn | சமன் | முடிவில்லை | வெற்றி சதவீதம் | |
தேர்வு[50] | 25 | 4 | 9 | 12 | 0 | – | 16% |
ஒ.ப.து[51] | 73 | 23 | 43 | – | 2 | 6 | 31.50% |
அசாருதீனுக்கு அடுத்தபடியாக சச்சின் தலைவராகத் தேர்வானார்.
ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடரை 0-3 எனும் விகிதத்தில் தோல்வியடைந்தது.[52] இருந்தபோதிலும் தொடர் நாயகன் மற்றும் ஒரு போட்டியில் ஆட்ட நாயகன் விருதினையும் சச்சின் வென்றார்.[52][53] பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை 0-2 என தோற்ற பின்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சௌரவ் கங்குலி 2000 ஆம் ஆண்டில் தலைவராக பொறுப்பேற்றார்.[54][55]
சர்வதேச போட்டிகளில் அடித்த நூறுகள்
[தொகு]முதன்மைக் கட்டுரை: சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அடித்த நூறுகள்
சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்துள்ளார்.[56] இவர் அதிக நூறு அடித்தவர்கள் வரிசையில் வரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.[57][58]தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 51 நூறுகளும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 49 நூறுகளும் அடித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டில் வங்காளதேசத் தூடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச போட்டிகளில் 100 நூறுகள் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.[56]
சச்சினின் சாதனைகள்
[தொகு]எதிரணி நாடுகளுக்கு எதிராக சச்சின் அடித்த நூறுகளின் விவரம்:
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி (15,921) மற்றும் ஒருநாள் போட்டிகளில் (18,426) அதிக ஓட்டங்கள் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.[1] மூன்று வடிவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் (தேர்வு, ஒ.ப.து, ப இ20) 30,000 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்த ஒரே வீரர் இவர் ஆவார்.[9] உள்ளூர் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் (முதல் தரத் துடுப்பாட்டம்,பட்டியல் அ துடுப்பாட்டம், இருபது20) 50,000 ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் 16 ஆவது வீரர் எனும் சாதனை படைத்தார்.
இந்தச் சாதனையை அக்டோபர் 5, 2013இல் நடைபெற்ற சாம்பியன்சு இலீகு இருபது20 தொடரில் திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் விளையாடிய போது படைத்தார்.[59][60][61]
ஆட்டநாயகன் விருதுகள்
[தொகு]விருதுகள்
[தொகு]பாரத ரத்னா விருது விமர்சனம்
[தொகு]முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஹாக்கியின் மறைந்த வீரர் தியான் சந்த்திற்கு வழங்க வேண்டியிருந்த விருதை மாற்றி சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கியதாக இவ்விருதின் தேர்வு முறை குறித்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.[68][69]
புகழுரைகள்
[தொகு]- உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் பிராட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
- ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.
ஒரு நாள் போட்டியில் இரட்டைச்சதம்
[தொகு]2010 பிப்ரவரி 24, குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காது 200 (147) ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.
"இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!"- சச்சின்
என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார்.[70]
ஓய்வு
[தொகு]மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நவம்பர் 14 முதல் 18 வரை நடைபெற்ற உள்ள 200 ஆவது டெஸ்ட் போட்டியுடன் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.[71][72]
2013 நவம்பர், 15 அன்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது இறுதி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் இன்னிங்சில் 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 16,000 ஓட்டங்களை எட்ட 79 ஓட்டங்கள் இருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.[73]
இவரது ஓய்வின்போது இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க முடிவு செய்து பின்னர் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்டது.. இப்பரிசு பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் ஆவார். மேலும், மிக இளவயதில் பாரத ரத்னா விருதைப்பெற்ற முதல் இந்தியர் என்கிற சிறப்புக்கும் உரியவர் ஆவார்.[20]
மாநிலங்களவை உறுப்பினர்
[தொகு]சச்சின் டெண்டுல்கர் , ஏப்ரல் 27 , 2012 அன்று மாநிலங்களவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .[74] மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து , ஆகத்து 2014 வரை , 3 முறை மட்டுமே அவைக்கு வந்திருந்தார் .[75]
சுயசரிதை
[தொகு]2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி மும்பையில் என் வழி தனி வழி (நூல்) (Playing It Free Way) என்ற தலைப்பிலான தனது சுயசரிதையை வெளியிட்டார்.[76][77][78]
வாழ்க்கை வரலாறு
[தொகு]நூல்கள்
[தொகு]டெண்டுல்கரின் வாழ்க்கையை மையப்படுப்படுத்தி வெளியான நூல்கள்
திரைப்படம்
[தொகு]- சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ் எனும் இந்தியத் திரைப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் சச்சினின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு இயக்கினார்.
இதில் சச்சின் கதாப்பத்திரத்தில் சச்சின் டெண்டுல்கரே நடித்தார்.[88]